1988 ஆம் ஆண்டு இலங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13 ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக மத்திய மாகாண சபை நிறுவப்பட்டது.

குண்டசாலை, பல்லேகலையில் அமைந்துள்ள மத்திய மாகாண சபை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மாகாண பிரதான செயலகமானது, மத்திய அரசாங்கத்துடன் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேணி, மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மூலமாக மாகாண மக்களுக்குப் பயனுள்ளதும் திறனானதுமான சேவையை வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டல், மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்கின்றது.

மத்திய மாகாண பிரதான செயலாளரின் தலைமையின் கீழ் நிர்வாகம், பணியாளர் மற்றும் பயிற்சி, திட்டமிடல், நிதி மற்றும் பொறியியல் சேவைகள் ஆகிய துறைகளை உள்ளடக்கியதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பிரதிப் பிரதான செயலாளர்கள் மற்றும் பல்வேறு பதவிகளை வகிக்கும் சுமார் 150 உத்தியோகத்தர்களைக் கொண்ட ஊழியர் குழுவினர் பிரதான செயலகத்தில் பணியாற்றுகின்றனர்.

பிரதிப் பிரதான செயலாளர்களின் அலுவலகங்களுக்கு மேலதிகமாக, மாகாண கணக்காய்வுத் திணைக்களம், மாகாண பொறியியல் சேவைகள் திணைக்களம் மற்றும் பிராந்திய பொருளாதார அபிவிருத்தி முகவர் நிலையம் என்பனவும் பிரதான செயலாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கிவருவதுடன், மேலாண்மை அபிவிருத்தி மற்றும் பயிற்சி அலகு, சட்ட அலகு, மொழிபெயர்ப்பு அலகு, தகவல் தொழில்நுட்ப அலகு, பராமரிப்பு அலகு ஆகிய அலகுகளின் மூலம் தேவையான உதவிச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

தொலைநோக்கு

இலங்கையின் மிகச்சிறந்த மாகாண சபையாக மாறுதல்.

பணிக்கூற்று

மத்திய மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் உரித்தான கலாச்சார, சமூக, பொருளாதார நிலைமைகள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பிலும் தொழில்நுட்பம் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தி, மனித மற்றும் பௌதிக வளங்களை வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தி மத்திய மாகாண மக்களுக்கு நிலையான, கௌரவமான உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்.

தொலைபேசி
812236754
பெக்ஸ்
812239075
முகவரி
පළාත් සභා සංකීර්ණය, පල්ලෙකැලේ, කුණ්ඩසාලේ
மின்னஞ்சல்
csecp1@gmail.com
வேலை நேரம் Closed
திங்கள் முதல் வௌ்ளி வரை மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 4.15
அறிவிப்புப் பலகை
2026 Jul 03
Temporary recruitment on a contract basis for the post of Engineer for Ditwah additional staff for Central Provincial Council (The deadline has been extended until July 24)
2026 Jun 23
ගාස්තු උපලේඛනය 2026 වසර මැද (II කොටස)
සිංහල தமிழ் English
2026 Jun 18
2026 අංක 02 දරණ පරිපූරක ඇස්තමේන්තුව
සිංහල தமிழ் English
2026 Jun 02
ගාස්තු උපලේඛනය 2026 වසර මැද (I කොටස)
සිංහල தமிழ் English
2026 May 22
குறைநிரப்பு மதிப்பீடு - 2026
සිංහල தமிழ் English
2025 Dec 29
සිංහල தமிழ் English
2025 Dec 22
හදිසි ඉදිකිරීම් හා අලුත්වැඩියා සඳහා කොන්ත්‍රාත් ආයතන ලියාපදිංචි කිරීම - 2025
සිංහල தமிழ் English
உள்ளக விவகாரப் பிரிவு

உங்களது பிரச்சினைகள், முறைப்பாடுகள், கருத்துக்கள் என்பற்றை உங்கள் வீட்டிலிருந்தே மத்திய மாகாண பிரதான செயலாளருக்கு அனுப்பி வைக்க முடியும்.

Call
081-2121321
Whatsapp
0706997558
...
“සාරථී“ සරත් ඒකනායක ශ්‍රවණාගාරය* වැඩිදුර තොරතුරු සහ වෙන්කිරීම් සඳහා*
...
சிங்கள் டிரீ விடுமுறை இல்லம் වැඩිදුර තොරතුරු සහ වෙන්කිරීම් සඳහා*
மாகாண தொலைபேசி அழைப்பு ஏடு
மத்திய மாகாணத்திற்குரிய அனைமத்து நிறுவனங்களின் தொலைபேசி/ பெக்ஸ் இலக்கங்கள், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளம் தொடர்பான தகவல்கள் ஒரே இடத்தில்.