நுவரெலியாவில் உள்ள சிங்கிள் ட்ரீ மலை உச்சியில், அமைதியான மற்றும் அழகான சூழலில் அமைந்துள்ள, மத்திய மாகாண பிரதான செயலகத்திற்குச் சொந்தமான சிங்கிள் ட்ரீ விடுமுறை இல்லம், நுவரெலியா நகர மையத்திலிருந்து பத்து நிமிட பயண தூரத்தில் அணுகக்கூடியதாக அமைந்துள்ளது.
அரசாங்க அதிகாரிகளும் பொதுமக்களும் இந்த விடுமுறை இல்லத்தினை அறைகளாகவோ அல்லது முழு விடுமுறை இல்லமாகவோ குறைந்த விலையில் முன்பதிவு செய்யலாம். குளியலறை வசதிகளுடன் கூடிய மூன்று அறைகள், சூடான நீர் வசதிகளுடன் கூடிய பொதுவான குளியலறை, நவீன சமையலறை, ஒரு லிவிங் ரூம், ஒரு அழகிய முன் முற்றம் மற்றும் வாகன தரிப்பிட வசதிகளை இங்கே பெறலாம்.
கட்டணம்
| முன்பதிவு செய்யும் தரப்பு | ஏப்ரல்/ ஆகஸ்ட்/ டிசம்பர் மாதங்களுக்காக (பருவ காலம்) | ஏனைய மாதங்களுக்கு ( பருவம் அல்லாத காலம்) |
||
| ஒரு அறை | முழு விடுமுறை இல்லம் | ஒரு அறை | முழு விடுமுறை இல்லம் | |
| பிரதான செயலக அதிகாரிகள் | 4,000 | 14,000 | 2,500 | 9,000 |
| அரசாங்க ஊழியர்கள் | 6,000 | 21,000 | 3,750 | 13,500 |
| வெளியாட்கள் | 8,000 | 28,000 | 5,000 | 18,000 |
விண்ணப்ப படிவம்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை csecp1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும் அல்லது 070-4702500 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவும்.
பணம் செலுத்துதல்
முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்திற்காக பிரதான செயலாளரின் ஒப்புதல் கிடைத்த பிறகு, தொடர்புடைய தொகையை பின்வரும் கணக்கில் வரவு வைத்து, ரசீதை 070-4702500 வாட்ஸ்அப் என்ற எண்ணுக்கு தெளிவான படமாக அனுப்பி வைக்க வேண்டும். பணம் செலுத்தும் விபரங்கள்.
இரத்து செய்தல்
முன்பதிவு செய்யப்பட்ட திகதியில் விடுமுறை இல்லத்தினை நீங்கள் பயன்படுத்தப்படாவிட்டால், முன்பதிவு செய்யப்பட்ட திகதிக்கு 07 வேலை நாட்களுக்கு முன்னர் பிரதிப் பிரதான செயலாளர் (நிர்வாகம்) இற்குத் தெரிவிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் ரத்து செய்யப்பட்டதற்கான பணம் திருப்பி அளிக்கப்படமாட்டாது, மேலும் தொடர்புடைய ஆண்டு இறுதிக்குள் வரக்கூடிய பிறிதொரு திகதியை உங்களுக்கு வங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
நிபந்தனைகள்
மேலதிக விசாரணைகளுக்காக
081-4953245 / 070-4702500